2024-11-08
இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி செயற்பாட்டாளராகத் திகழும் Prime Lands (Pvt) Ltd, தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற வேர்ள்ட் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் 2024 இல் இரண்டு விருதுகளை சுவீகரித்துள்ளது. இலங்கையில் ஆண்டின் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் 2024 மற்றும் நிறுவனத்தின் புதிய நிர்மாணத் திட்டமான YOLO க்காக, இலங்கையின் ஆண்டின் சிறந்த ரியல் எஸ்டேட் செயற்திட்டம் 2024 ஆகிய விருதுகளை Prime Lands (Pvt) Ltd நிறுவனம் சுவீகரித்துள்ளது. இந்த விருதுகளினூடாக, புத்தாக்கம், சிறப்புக்கான ஈடுபாடு மற்றும் உலகத் தரம் வாய்ந்த நியமங்களை பேணுதல் போன்றவற்றினூடாக ரியல் எஸ்டேட் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி வரும் Prime Lands’ இன் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
Prime Lands இன் ஸ்தாபகரும் குழும தவிசாளருமான பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடி எனும் வகையில், பாரம்பரிய வரையறைகளுக்கு அப்பாலான வசிப்பிட அனுபவங்களை ஏற்படுத்துவதில் Prime Lands எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தது. செங்கற்கள் மற்றும் சாந்துக் கலவையைக் கொண்டு கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு என்பதற்கு அப்பால் சென்று, கனவுகளுக்கான அடித்தளங்களை ஏற்படுத்தல், எதிர்பார்ப்புகளின் அரண்களை கட்டியெழுப்பல் மற்றும் எமது பிரத்தியேகமான வாடிக்கையாளர்களுக்கு வரையறைகளில்லாத வாய்ப்புகளுடனான கூரைகளை உருவாக்கல் போன்றவற்றில் எமது மூலோபாய தீர்மானம் தங்கியுள்ளது. தொழிற்துறையில் எம்மை அசல் நியமங்களை ஏற்படுத்துவோராக எம்மை நிலைநிறுத்துவதில் இந்த நோக்கு கைகொடுத்துள்ளதுடன், இலங்கையின் ரியல் எஸ்டேட் கட்டமைப்பை மாற்றியமைப்பதுடன், ஒப்பற்ற பெறுமதியை தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொடுப்பதில் பங்களிப்பு வழங்குகின்றது.” என்றார்.
மூன்று தசாப்தகாலமாக, நம்பிக்கையை வென்ற நிர்மாண வடிவமைப்பாளராக Prime Lands தொழிற்துறையில் முன்னிலையில் திகழ்வதுடன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சுதல் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் போன்றவற்றை தொடர்ந்தும் நிறைவேற்றுவதற்காக புகழ்பெற்றுள்ளது. நீடித்து நிலைத்திருக்கும் மரபுவழியை உருவாக்குவதுடன், சொகுசு. அதிசொகுசு. ஓய்வு மற்றும் வாழ்க்கைமுறை வசிப்பிடங்களை, தனது புரட்சிகரமான செயற்திட்டங்களினூடாக Prime Lands மாற்றியமைத்துள்ளது. இலங்கையில் நவீன இல்லத் தொடர்மனை நகரங்களை நிறுவும் நிலைக்கு நிறுவனம் வளர்ச்சியடைந்துள்ளதுடன், எதிர்கால தலைமுறைகளுக்கு வசிக்கக்கூடிய, அரவணைப்பான அயலவர் சூழலை உருவாக்கிய வண்ணமுள்ளது.
மேலும், அலங்கார வடிவமைப்பு மற்றும் பலதுறைசார் நிபுணத்துவம் போன்றவற்றில்
Related News
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி