2025-05-07

அமெரிக்காவின் 'வேர்ல்ட் எகனாமிக் மெகசின்' விருது விழாவில் (World Economic Magazine Awards USA) பிரைம் லேண்ட்ஸ் நிறுவனம், "இலங்கையின் மிகவும் புதுமையான அசையாச் சொத்து அபிவிருத்தியாளர் - 2025" (Most Innovative Property Developer – Sri Lanka 2025) ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

இலங்கையின் அசையாச் சொத்துத் துறையின் முன்னோடியான பிரைம் லேண்ட்ஸ் (Prime Lands), அமெரிக்காவில் நடைபெற்ற 7 வது வருடாந்திர வேர்ல்ட் எகனாமிக் மெகசின் விருது விழாவில் (World Economic Magazine Awards 2025) "இலங்கையின் மிகவும் புதுமையான அசையாச் சொத்து அபிவிருத்தியாளர் - 2025" (Most Innovative Property Developer – Sri Lanka 2025) ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க சர்வதேச விருது, புரட்சிகரமான கருத்துக்கள், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகள் மற்றும் அதிநவீன மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் அசையாச் சொத்துத் துறையை மறுவரையறை செய்வதில் பிரைம் லேண்ட்ஸ் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலான சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ள பிரைம் லேண்ட்ஸ் நிறுவனம், J'adore, YOLO, C'est la vie போன்ற தொலைநோக்குத் திட்டங்கள், தனித்துவமான வாழ்க்கை முறைக் கருத்துக்கள் மற்றும் புதுமையான நிதித் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இத்துறையில் தொடர்ந்து புதிய தரநிலைகளை நிறுவியுள்ளது. தரம், வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு, இலங்கையின் அசையாச் சொத்துத் துறையில் மிகவும் நம்பகமான பெயராக அதனை நிலைநிறுத்தியுள்ளது.

இந்த சர்வதேச அங்கீகாரத்தை வென்றது, இத்துறையில் பிரைம் லேண்ட்ஸின் தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், இலங்கையர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய, முதலீட்டிற்கு தகுதியான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற சொத்துக்களை வழங்குவதற்கான அவர்களின் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. வருங்கால சந்ததியினருக்கு விதிவிலக்கான முதலீட்டு வாய்ப்புகளையும் கனவு இல்லங்களையும் வழங்கி, தேசத்தின் அசையாச் சொத்துத் துறையின் முன்னோடியாக பிரைம் லேண்ட்ஸ் தொடர்ந்து எதிர்காலத்தை வடிவமைத்து வருகிறது.

மூலோபாய ரீதியாக அமைந்துள்ள நிலப்பரப்புகள் முதல் ஆடம்பர வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் வரை, நாட்டின் மிகச்சிறந்த அசையாச் சொத்து திட்டங்கள் சிலவற்றை பிரைம் லேண்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மேம்பாட்டுத் திட்டமும் நிறுவனத்தின் அடிப்படை மதிப்புகளான வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் சமரசமற்ற தரம் ஆகியவற்றால் வழிநடத்தப்படுகிறது. இந்த சிறப்பம்சங்கள் பிரைம் லேண்ட்ஸ் நிறுவனத்திற்கு இலங்கையின் மிகவும் நம்பகமான அசையாச் சொத்து பிராண்ட் என்ற நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளன.

தொலைநோக்கு மேம்பாட்டு உத்திகள் மூலம் தொழில்துறை தரங்களைத் தொடர்ந்து உயர்த்தும் அதே வேளையில், அனைத்து இலங்கையர்களுக்கும் வீட்டு உரிமையை எளிதாக்குவதற்கான நோக்கத்தை இந்த விருது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. வேர்ல்ட் எகனாமிக் மெகசின் விருதுகள் வழங்கிய இந்த சர்வதேச அங்கீகாரம், ஆசிய பிராந்தியத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களின் புதுமை, வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் நீண்ட கால தாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட கடுமையான மதிப்பீட்டிற்குப் பின்னரே வழங்கப்பட்டுள்ளது.

தனது புதுமைப் பாரம்பரியத்திற்கு இணங்க, பிரைம் லேண்ட்ஸ் நிறுவனம் தனது புதிய புரட்சிகரமான அறிமுகமான ‘PRIME MAX’ ஐ பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. இது ஒரு வீட்டை சொந்தமாக்குவதை முன்னெப்போதையும் விட எளிதாகவும், புத்திசாலித்தனமாகவும், மலிவாகவும் மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான வீட்டு உரிமை கட்டணத் திட்டமாகும் (homeownership payment plan). PRIME MAX என்பது வெறும் கட்டணத் திட்டம் மட்டுமல்ல; இது வீட்டு உரிமை மற்றும் நிதிச் சுதந்திரத்திற்கான ஒரு நுழைவாயிலாகும்.

PRIME MAX மூலம், பிரைம் லேண்ட்ஸ் நிறுவனம் தரம் மற்றும் நம்பிக்கை குறித்த தனது வாக்குறுதியை நிலைநிறுத்தி, மலிவு விலை என்ற கருத்தை மறுவரையறை செய்கிறது. இந்த தைரியமான முயற்சி, முதலீட்டிற்கு தகுதியான, எளிதில் அணுகக்கூடிய சொத்துக்கள் மூலம் இலங்கையர்கள் தங்களது எதிர்காலத்தை சுயமாக வடிவமைத்துக் கொள்ள சவியூட்டும் நிறுவனத்தின் பரந்த நோக்கத்தின் ஒரு பகுதியாகும்.

பிரைம் லேண்ட்ஸ் தனது புதுமை மற்றும் சிறப்பான பயணத்தைத் தொடரும் வேளையில், இந்த விருது அதன் பாரம்பரியத்தில் மற்றொரு மைல்கல்லாக அமைவதுடன், இலங்கையின் அசையாச் சொத்துத் துறையின் முன்னோடியாகவும், மனித வாழ்க்கை முறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு நிறுவனமாகவும் அதன் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Related News

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.