2026-10-23

Prime Lands நிறுவனம் YouTube Silver Play Button ஐப் பெற்ற இலங்கையின் முதலாவது ரியல் எஸ்டேட் நிறுவனம் எனும் பெருமையை பெற்றுள்ளது

100,000 Subscribers ஐக் கடந்து, பெருமைக்குரிய YouTube Silver Play Button ஐப் பெற்ற நாட்டின் முதலாவது ரியல் எஸ்டேட் நிறுவனம் என்ற பெருமையை Prime Lands எய்தி, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் புதிய கால்தடத்தைப் படைத்துள்ளது. Prime Group தனது 30 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், மூன்று தசாப்த கால வளர்ச்சி மற்றும் புத்தாக்கங்களுடன் இக்கணிசமான டிஜிட்டல் சாதனையும் இணைந்துள்ளது.

YouTube இன் Creator Awards திட்டத்தின் அங்கமாக வழங்கப்படும் இந்த Silver Play Button, கணிசமான சந்தாதாரர்களின் மைல்கற்களை எட்டும் சேனல்களை அங்கீகரிப்பதாக அமைந்துள்ளது. Prime Lands ஐப் பொறுத்தவரை, இந்த மைல்கல்லை எட்டியமை பார்வையாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வளர்ச்சியை மட்டும் காண்பிக்காமல், பாரம்பரிய சந்தைப்படுத்தல் முறையிலிருந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையை நோக்கிய அதன் மாற்றத்தையும் பிரதிபலிக்கிறது. அத்துடன், இலங்கையர்கள் ரியல் எஸ்டேட் துறையைக் கண்டறியும் மற்றும் அணுகும் முறையை மறுவரையறை செய்வதற்கு உள்ளடக்கம், தொழில்நுட்பம் மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் இது காட்டுகிறது. இன்று, 600,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட ஒரு YouTube community ஐக் கொண்டுள்ள Prime Lands, தனது டிஜிட்டல் தொடர்புகளைத் தொடர்ந்து விஸ்தரிப்பதுடன், இலங்கை முழுவதிலும் உள்ள சொத்துத் தேடுபவர்களுடனான தனது உறவையும் மேலும் ஆழப்படுத்தி வருகின்றது

YouTube Silver Play Button என்பது, Prime Lands ஐப் பொறுத்தவரை வெறும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை எட்டிய ஒரு சாதனையை விட மேலானதாகும். இது தனது டிஜிட்டல் பார்வையாளர்களுடன் இந்நிறுவனம் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையையும், இலங்கையில் ரியல் எஸ்டேட் சந்தைப்படுத்தலை மறுவடிவமைப்பு செய்வதில் அது வகிக்கும் முக்கிய பங்கையும் பிரதிபலிக்கிறது. உண்மையான மற்றும் அறிவூட்டும் உள்ளடக்கங்கள் மூலமாக சொத்துக்கள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கொள்வனவு செய்யும் நடைமுறைகளை வெளிப்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது தெரிவுகளைப் பற்றி மேலும் தன்னம்பிக்கையுடன் ஆராயவும், சொத்துக்கள் தொடர்பில் சிறந்த மற்றும் தெளிவான முடிவுகளை எடுக்கவும் Prime Lands வழிவகை செய்கிறது.

Prime Lands (Pvt) Ltd இன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரந்தெனிய கருத்துத் தெரிவிக்கையில், “வாங்குபவர்களுக்குத் தெளிவையும் தன்னம்பிக்கையையும் வழங்கி அவர்களை வலுப்படுத்துவதே எப்போதும் எங்களது மூலோபாயமாக இருந்து வருகிறது. எமது YouTube பயணத்தின் மூலம், மக்கள் ரியல் எஸ்டேட் முடிவுகளை எடுக்கும் முறையை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம். ஆழ்ந்த கருத்துக்களையும் அறிவையும் வழங்கும் உள்ளடக்கங்கள் வாயிலாகச் சிறந்த சொத்துத்

Related News

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.