2025-09-13

Prime Group இலங்கையின் முதலாவது சர்வாம்சங்களும் பொருந்திய ரியல் எஸ்டேட் மொபைல் app ஆன Prime Edge ஐ அறிமுகம் செய்துள்ளது

Prime Group தனது புரட்சிகரமான மொபைல் செயலியான Prime Edge அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது, மேலும் இலங்கையின் ரியல் எஸ்டேட் கட்டமைப்பில் புதிய யுகத்தை கட்டியெழுப்பும் வகையில் இந்த அறிமுகம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் முதலாவது சர்வாம்சங்களும் பொருந்திய ரியல் எஸ்டேட் மொபைல் app ஆக அமைந்துள்ள Prime Edge, சொத்துகள் பயணத்தை சீரமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பாவனையாளர்களுக்கு ஒப்பற்ற சௌகரியம் மற்றும் புத்தாக்கத்தை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.

Prime Group இன் சந்தைத் தலைமைத்துவத்தை உறுதி செய்வதாக Prime Edge அமைந்துள்ளதுடன், இலங்கையின் சொத்துக்கள் துறையினுள் டிஜிட்டல் புத்தாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் அணுகச் செய்வதில் பரந்தளவு சமூகங்களுக்கு பங்களிப்பு வழங்கப்படுகிறது. மேலும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு ஆதரவளித்தல் போன்ற நிறுவனத்தின் நோக்கங்களுடன் பொருந்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருவதுடன், தற்போதும் ஆரம்ப நிலைப் பகுதியில் காணப்படும் சூழலில், தொழில்னுட்பதிறன் படைத்த கட்டமைப்புகள் சொத்துகள் சந்தையில் பிரவேசித்துள்ள நிலையில், Prime Edge இன் பொருத்தப்பாடு மேலும் வலுவடைந்து, வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் மற்றும் தொழிற்துறை செயற்பாடுகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.

Prime Group இன் உறுதியான உள்ளக தகவல் தொழில்னுட்ப பிரிவின் தொழில்னுட்ப புத்தாக்க வடிவமைப்பாக Prime Edge அமைந்துள்ளதுடன், பிரதம தகவல் தொழில்னுட்ப அதிகாரி ரசிக உதயங்கவின் வழிகாட்டலில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. இவரின் தலைமையிலான அணியினர், நவீன தொழில்னுட்ப தீர்வுகளை முன்னெடுத்து, நிறுவனத்தை ரியல் எஸ்டேட் தொழில்னுட்பத்தில் முன்னோடியாக வடிவமைத்துள்ளனர்.

Prime Group இன் இணைத் தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “துரித டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் புதுமையான தீர்வுகளை முதலில் சந்தையில் அறிமுகம் செய்வதில் Prime Group பெருமயடைந்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Prime Edge மொபைல் App, தொழில்னுட்பத்தை இணைத்து, ஒப்பற்ற பெறுமதி மற்றும் சௌகரியத்தை பெற்றுக் கொடுக்கும் நிறுவனத்தின் - 

Related News

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி