2026-03-09

Prime Group இளைஞர்களின் விருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் Battle of the Blues மற்றும் Maroons சமர் போட்டிகளின் உத்தியோகபூர்வ ரியல் எஸ்டேட் பங்காளராக தொடர்ந்தும் அனுசரணை

Prime Group, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் 30 வருட கால சிறப்பைக் கொண்டாடும் தருணத்தில், சமூக மற்றும் இளைஞர் அபிவிருத்திக்கான தனது அர்ப்பணிப்பை வெறும் கட்டுமானத் துறையில் மாத்திரம் மட்டுப்படுத்தாது அதற்கும் அப்பால் விஸ்தரித்துள்ளது. இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நிறுவனங்கள், பாரம்பரியங்கள் மற்றும் சமூகங்களில் முதலீடு செய்யும் விரிவான நோக்கத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு பாடசாலை கிரிக்கெட் சமர்களுக்கான உத்தியோகபூர்வ ரியல் எஸ்டேட் பங்காளராக இம்முறை Prime Group இணைந்துள்ளது. அதற்கமைய, றோயல் கல்லூரி மற்றும் பரி. தோமாவின் கல்லூரிக்கு இடையிலான 147 ஆவது Battle of the Blues மற்றும் ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரிக்கு இடையிலான 96 ஆவது Battle of the Maroons ஆகியவற்றுக்கு நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.

சுமார் ஒன்றரை தசாப்த காலமாக இடம்பெற்று வரும் Battle of the Blues சமர், அதன் பாரம்பரியத்தை தொடர்ந்தும் பேணி வருகிறது. விளையாட்டுக்கு அப்பால், றோயல் கல்லூரி மற்றும் பரி. தோமாவின் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளின் பல தலைமுறைகளை ஒன்றிணைக்கும் போட்டித்தன்மை, பெருமை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் சங்கமிப்பாக இது அமைந்துள்ளது.

இந்த மரபுடன் உத்தியோகபூர்வ ரியல் எஸ்டேட் பங்காளராக Prime Group பெருமையுடன் கைகோர்த்துள்ளது. ஒரே மாதிரியான தொலைநோக்குச் சிந்தனை, சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கு மற்றும் நிலைபேறான தாக்கத்தை ஏற்படுத்தும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்ட இரு தரப்பினருக்கும் இடையிலான ஓர் இயல்பான இணக்கப்பாடாக இந்தப் பங்காண்மை உடன்படிக்கை அமைகின்றது.

இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாடசாலைக் கிரிக்கெட் சமரான 'Battle of the Blues' இளைஞர்களின் நற்பண்புகளை வடிவமைப்பதைப் போல, சமூகங்களில் வேரூன்றி, காலத்தால் அழியாத நினைவுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சென்று, ஒருமித்த உணர்வுடன் வாழ்வதற்கு ஏற்ற சூழல்களை Prime Group உம் உருவாக்கி வருகின்றது.

1924 ஆம் ஆண்டில் ஆனந்த கல்லூரிக்கும் நாலந்த கல்லூரிக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்ட Battle of the Maroons விறுவிறுப்பான போட்டித் தொடர் என்பதுடன் நீண்ட வரலாற்றையும் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, இப்போட்டித்தொடரானது இலங்கையின் மிகச்சிறந்த கிரிக்கெட் திறமைகளை உருவாக்குவதற்கான ஒரு தளமாக விளங்குவதுடன், உள்நாட்டு கழகங்கள் மற்றும் தேசிய அணியைப்

Related News

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.