2025-08-22

Prime Group இலங்கையின் முதலாவது ஆடம்பர ரியல் எஸ்டேட் வாடிக்கையாளர் அனுபவ முயற்சியான 'Prime Premier' ஐ அறிமுகம் செய்துள்ளது

Prime Group இலங்கையின் முதலாவது ஆடம்பர ரியல் எஸ்டேட் வாடிக்கையாளர் அனுபவ முயற்சியான 'Prime Premier' ஐ அறிமுகம் செய்துள்ளது

-இலங்கையின் ரியல் எஸ்டேட் தொழிற்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சி-

இலங்கையின் ரியல் எஸ்டேட் தொழிற்துறையில் மூன்று தசாப்த கால தலைமைத்துவத்தைக் கொண்டாடும் Prime Group, வாடிக்கையாளர்கள் ரியல் எஸ்டேட் உடன் தொடர்புகளை பேணும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 'Prime Premier' எனும் பிரத்தியேகமான வாடிக்கையாளர் அனுபவ பகுதியை அறிமுகம் செய்துள்ளது.

இல. 226, லேக் டிரைவ், கொழும்பு 08 எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த வளாகம், ஆகஸ்ட் 22 ஆம் திகதின்று, Prime Group இன் தவிசாளர், தலைமை அதிகாரி மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரினால், சிறப்பு அதிகாரிகள் மற்றும் அதிதிகள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. தனித்துவம், நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் தன்னிறைவு போன்ற நிறுவனத்தின் உறுதி செய்யப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் Prime Group இன் வருடாந்தபூர்த்தி கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

இலங்கை ரியல் எஸ்டேட் தொழிற்துறையின் முதலாவது வாடிக்கையாளர் அனுபவப் பகுதியாக Prime Premier அமைந்திருப்பதுடன், இதில் புரட்சிகரமான வாடிக்கையாளர் உறவுபேண் அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது ஒப்பற்ற தொழிற்துறை நியமங்களையும் நிறுவியுள்ளது. மேலும் பிரிவுசார் முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் குழுமத்தின் தலைமைத்துவத்தை இந்த முன்னோடியான செயற்பாடு வெளிப்படுத்தியுள்ளது.

Prime Group இன் தவிசாளர் பிராஹ்மனகே பிரேமலால் குறிப்பிடுகையில், “எமது மூன்று தசாப்த கால பயணத்தின் அங்கமாக Prime Premier அமைந்திருப்பதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் எந்தளவு முன்னுரிமை அளிக்கிறோம்  என்பதை வெளிப்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளது. ஆடம்பர ரியல் எஸ்டேட் ஈடுபாட்டில் ஒப்பற்ற அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பாரம்பரிய அமைவிடப் பகுதிகளை விட வேறுபட்டதாக இது அமைந்துள்ளது. பாரம்பரிய சொத்து பரிவர்த்தனைகள் என்பதற்கு அப்பால் சென்று, எமது வாடிக்கையாளர்களுடன் சிறந்த அனுபவங்களை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்திருப்பதுடன், அவர்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாகவும் அமைந்துள்ளது.”

Related News

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி