logo

2025-12-19

'டிட்வா' (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பொலிஸ் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு ஆதரவளிக்க பிரைம் குரூப் (Prime Group) முன்வந்துள்ளது.

'டிட்வா' (Ditwah) சூறாவளியின் பின்னர், இலங்கை பொலிஸ் அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக அயராது உழைத்த அதேவேளையில், அவர்களின் சொந்தக் குடும்பங்கள் பலவும் கடுமையான இன்னல்களுக்கு முகம் கொடுத்தன. இந்த மறைமுகமான அர்ப்பணிப்பை அங்கீகரித்த பிரைம் குரூப் (Prime Group), பாதிக்கப்பட்ட பொலிஸ் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், அத்தியாவசிய கல்வி உபகரணங்களை வழங்குவதற்கும், அவர்கள் எதிர்கொண்ட சவால்களுக்கு மத்தியிலும் தங்களது கல்வியை தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்கும் ஒரு தேசிய அளவிலான முன்முயற்சியை ஆரம்பித்தது.

'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தங்களது படிப்பை நம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் மீண்டும் தொடங்குவதற்கு உதவும் வகையில், பிரைம் குரூப் அவர்களுக்கு அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களை வழங்கியது. ஒரு பொறுப்புள்ள பெருநிறுவனமாக மேற்கொள்ளப்பட்ட இந்த முன்முயற்சியின் மூலம், இலங்கை முழுவதும் உள்ள 1,000 மாணவர்கள் 10 மில்லியன் ரூபா முதலீட்டில் இந்த உதவிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் குடும்ப நலன்புரி சங்கம் மற்றும் பொலிஸ் சேவா வனிதா பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிரைம் குரூப் சார்பில் அதன் தலைவர், இணைத் தலைவி, பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் பங்கேற்றனர். இத்திட்டம் திரு. அருண பிரசாத் லேகம்வகே மற்றும் பேராசிரியர் கிருஷாந்த பத்திராஜ ஆகியோரின் ஒருங்கிணைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து பிரைம் குரூப் இணைத் தலைவி சந்தாமினி பெரேரா தெரிவிக்கையில், “எமது நாட்டுக்காக பொலிஸார் ஆற்றிய உன்னதமான சேவைக்கு நன்றிக்கடனாக, பொலிஸ் குடும்பங்களுடன் இணைந்து நிற்பதிலும் அவர்களின் பிள்ளைகளுக்கு ஆதரவளிப்பதிலும் பிரைம் குரூப் பெருமையடைகிறது. டிட்வா சூறாவளியின் போது தங்களது சொந்த இழப்புகளையும் இன்னல்களையும் எதிர்கொண்ட போதிலும், இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தளராத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு தொடர்ந்து சேவையாற்றினர். மிகவும் சவாலான சூழ்நிலையிலும் சமூகங்களைப் பாதுகாப்பதற்கான அவர்களின் அர்ப்பணிப்பு எங்களது ஆழ்ந்த மரியாதைக்குரியது” என்றார்.

இலங்கையின் அசையாச் சொத்துத் துறையில் பிரைம் குரூப் தனது 30 ஆண்டுகால தலைமைத்துவத்தைக் கொண்டாடி வரும் வேளையில், வணிகத்திற்கு அப்பாற்பட்டு, நெகிழ்ச்சியான சமூகங்களை உருவாக்குவதற்கும் தேசத்திற்கு ஆதரவளிப்பதற்கும் தனது அர்ப்பணிப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம், குடும்பங்களுக்கு நீடித்த மதிப்பை உருவாக்குவதிலும், தேசத்திற்குச் சேவையாற்றுபவர்களுக்குத் தேவையான காலங்களில் உறுதுணையாக நிற்பதிலும் பிரைம் குரூப் கொண்டுள்ள நீண்டகால நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Related News

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.