2025-03-20
முன்னொரு போதுமில்லாத வகையில் 10% ஆரம்ப கொடுப்பனவு மற்றும் 0.5% மாதாந்த கட்டணங்கள்
பெரும் கனவுகள், சிறு கொடுப்பனவுகள்
இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை மாற்றியமைக்கும் புதிய அறிமுகமாக Prime Group இனால் PrimeMax எனும் புத்தாக்கமான வீட்டு உரிமையாண்மை மற்றும் முதலீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொத்து உரிமையாண்மையை எளிமைப்படுத்தி, நீண்ட கால சொத்து உருவாக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. PrimeMax இன் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வு கொழும்பு Shangri-La ஹோட்டலில் மார்ச் 16ஆம் திகதி நடைபெற்றது. இதில், தொழிற்துறை முன்னோடிகள், நிதிசார் நிபுணர்கள் மற்றும் வீட்டு உரிமையாளராவதில் ஆர்வம் கொண்டவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ரியல் எஸ்டேட் பெறுமதி சேர்ப்பை பயன்படுத்திக் கொள்வது தொடர்பில் முதலீட்டாளர்கள் பல மூலோபாய வழிமுறைகளை நாடியிருந்த போதிலும், பல வருடகாலமாக வீடொன்றை கொள்வனவு செய்வோர், அதனைத் தாங்கிக் கொள்வது தொடர்பான சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
ஒப்பற்ற 10% ஆரம்பக் கொடுப்பனவு மற்றும் 0.5% எனும் மாதாந்த தவணைக் கட்டணம் ஆகியவற்றுடன், PrimeMax இனால் பிரவேசத்துக்கான தடைகள் நீக்கப்படுவதுடன், சொத்துக்களின் பெறுமதி சேர்ப்பு ஏற்படும் நிலையில் நிதிசார் நெகிழ்ச்சித் தன்மையை வழங்கி, குறைந்த ஆரம்ப கட்ட அர்ப்பணிப்பு மற்றும் நீண்ட கால நிதிசார் வருமதிகள் ஆகியவற்றை அறிமுகம் செய்து, சந்தையை மாற்றியமைக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
இதனூடாக, இலங்கையின் மிகவும் இலகுவாக அணுகக்கூடிய மற்றும் மூலோபாய ரியல் எஸ்டேட் தீர்வாக PrimeMax அமைந்திருப்பதுடன், தமது முதலாவது இல்லத்தை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு அல்லது தமது ரியல் எஸ்டேட் இருப்பை விரிவாக்கம் செய்து கொள்ள எதிர்பார்ப்போர் மற்றும் நீண்ட கால அடிப்படையில் பெறுமதி அதிகரிப்பை எதிர்பார்க்கும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களுக்கும் சிறந்த தீர்வாகவும் அமைந்திருக்கும்.
Prime Group இன் இணை-தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி