2024-02-22

பிரைம் குரூப்பின் (Prime Group) அற்புதமான புதிய திட்டமான ‘Waterfall Residencies Malabe’, நேர்த்தியான வாழ்க்கை முறையை விரும்பும் குடும்பங்களை ஆடம்பரமான அமைதியுடன் வரவேற்கிறது

இலங்கையின் முன்னணி அசையாச் சொத்து அபிவிருத்தியாளரான பிரைம் குரூப் (Prime Group), விருது பெற்ற தனது பரந்த விலா (Villas) திட்டங்களின் வரிசையில், மாலபேயின் சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் வேகமாக வளர்ந்து வரும் பகுதியில் அமைந்துள்ள அமைதியான, இயற்கை எழில் கொஞ்சும் குடியிருப்பு வளாகமான ‘Waterfall Residencies’ திட்டத்தை வெற்றிகரமாக வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்துள்ளது.

ஐந்து ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ‘Waterfall Residencies’ திட்டம், மூன்று படுக்கையறைகளைக் கொண்ட 50 தனித்துவமான இருமாடி விசாலமான வீட்டு அலகுகளைக் (individual two-storied housing units) கொண்டுள்ளது. இது கொழும்பின் நகர்ப்புற வசதிகளுக்கு அருகில், அமைதியான மற்றும் சௌகரியமான சூழலில் வாழ்வதற்கான வாய்ப்பை குடியிருப்பாளர்களுக்கு வழங்குகிறது. இதன் பெயரைக் குறிப்பது போல, 100 அடி உயர நீர்வீழ்ச்சி ஒன்று படிகக் குளத்தில் (crystal pond) விழுவது போன்ற இயற்கை எழிலுடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி மிகவும் தனித்துவமான அழகைப் பெற்றுள்ளது. நவீன கட்டிடக்கலை மற்றும் தற்கால சுற்றுச்சூழல் அம்சங்களுடன் கூடிய ‘Waterfall Residencies’, ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு ஒரு புதிய தரநிலையை உருவாக்குவதுடன், ஒரு முழுமையான குடும்ப இல்லமாக அமைகிறது.

இது குறித்து பிரைம் குரூப் தலைவர் பிரேமலால் பிராமணகே கூறுகையில், "‘Waterfall Residencies’ திட்டத்தை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைப்பதன் மூலம், ஒரு கனவு நனவாகியிருப்பதைக் கொண்டாடுகிறோம். இந்த அற்புதமான இல்லங்களை சொந்தமாக்கிக்கொண்ட புதிய உரிமையாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது இல்லத்தைப் பாதுகாப்பது என்பது வெறும் அதன் கட்டிடத்தை பராமரிப்பது மட்டுமல்ல; அது ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் சமூகத்தை உருவாக்குவதும், நமது சூழலைப் பாதுகாப்பதும் ஆகும். எங்களது முயற்சிகள் நனவாகும் வேளையில், நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வாழத் தகுந்த, அன்பான சமூகங்களை உருவாக்குவதற்கான எங்களது உன்னத பயணத்தை இன்னும் அர்ப்பணிப்புடன் தொடர நாங்கள் உறுதியளிக்கிறோம்." என்றார்.

சமீபத்தில் நடைபெற்ற விழாவில், அதிகாரிகள் முன்னிலையில் தங்களது பிரத்தியேக ‘Waterfall Residencies’ இல்லங்களின் சாவிகளைப் பெற்றுக்கொண்ட குடும்பங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தன. இயற்கையோடு இணைந்த நேர்த்தியான வாழ்க்கை முறையை அனுபவிக்கவும், புதிய நினைவுகளை உருவாக்கவும் இப்போது அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொழிலில் சட்டத்தரணியான புதிய வீட்டு உரிமையாளரான அனுராதா குணவர்தன கூறுகையில், "அசையாச் சொத்து சந்தையில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக பிரைம் லேண்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ள நற்பெயரின் காரணமாகவே நான் இதனைத் தேர்ந்தெடுத்தேன். ஆரம்பத்தில் நான் ஒரு சாதாரண வீட்டைத் தேடினேன், ஆனால் இறுதியில் எனக்கு ஒரு சிறிய சொர்க்கமே கிடைத்துள்ளது. வாடிக்கையாளர் திருப்தியில் பிரைம் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு, முதல் நாள் முதல் இன்று சாவிகளை ஒப்படைக்கும் விழா வரை தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் ராஜரீகமாக நடத்துகிறார்கள். இத்திட்டத்தின் மூலம் அவர்கள் மீண்டும் தங்களது சந்தை தலைமைத்துவத்தை நிரூபித்துள்ளனர். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன். இத்தகைய அற்புதமான, சுற்றுச்சூழல் நட்பு கருத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்காக பிரைம் குரூப்பிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

பாதுகாக்கப்பட்ட ஒரு தனித்துவமான குடியிருப்பு வலயாக (gated community) வடிவமைக்கப்பட்டுள்ள ‘Waterfall Residencies’, குடும்பங்களுக்கு உயர் பாதுகாப்பையும் தனித்துவத்தையும் உறுதி செய்வதுடன், இயற்கையோடு இணைந்த ஆரோக்கியமான மற்றும் நல்வாழ்வு வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது. ‘Waterfall Residencies’ குடியிருப்பாளர்களுக்கு நகர்ப்புற வாழ்க்கையின் எந்தவொரு வசதியையும் இழக்காமல், பல நவீன உள்கட்டமைப்பு வசதிகளை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

மற்றொரு மகிழ்ச்சியடைந்த வீட்டு உரிமையாளரான எம்.ஜே.டபிள்யூ. சில்வா கூறுகையில், "மாலபேயில் உள்ள ‘Waterfall Residencies’ இல்லங்களை ஒப்படைக்கும் விழாவில் கலந்துகொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பல நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் நிறைந்த ஒரு சந்தையில், வாடிக்கையாளர் திருப்திக்காக பிரைம் குரூப் காட்டும் அர்ப்பணிப்பு தனித்துவமானது. வெறும் லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் சேவையை வழங்குவதில் தலைவரின் அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகளை தனிப்பயனாக்கப்பட்ட சேவையின் மூலம் பூர்த்தி செய்வதில் பிரைம் குரூப் இத்துறையில் தனித்து நிற்கிறது. என்னைப்போன்ற வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு விதிவிலக்கான அனுபவத்தை வழங்குவதற்கான தலைவரின் தொலைநோக்கு தலைமைத்துவத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்." என்றார்.

28 ஆண்டுகால நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவ பின்னணியைக் கொண்ட பிரைம் குரூப்பின் ‘Waterfall Residencies’ திட்டம் அவர்களின் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாகும். இது அவர்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமாக ஒப்படைக்கப்பட்ட 24 வது விலா (villa) திட்டமாகும், அத்துடன் 2024 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட 2 வது திட்டமாகும். பிரைம் குரூப் அசையாச் சொத்துத் துறையில் புதிய எல்லைகளைத் தொட்டு, வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்கான மதிப்பைத் தொடர்ந்து வழங்கி வருவதால், இந்த ஆண்டிற்குள் மேலும் நான்கு திட்டங்கள் திட்டமிட்டபடி வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

Related News

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.