ஒரு அலகில் இருந்து
தலாவத்துகொடவில் அமைந்துள்ள கோர்ட்யார்டு பை பிரைம், வரையறுக்கப்பட்ட சில தனியார் வீடுகளை வழங்குகிறது. இந்த வீடுகள் மத்திய முற்றத்தை மையமாகக் கொண்டு தனித்துவமான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. தினசரி வாழ்க்கையின் மையத்தில் இயற்கையை கொண்டு வருவது இதன் முக்கிய நோக்கம். ஒவ்வொரு வீட்டிலும், அழகான திறந்த வெளி முற்றம் முக்கிய இடமாக அமைந்துள்ளது. அது:
ஹால், உணவு அறை, சமையலறை ,படுக்கையறைகள், குளியலறைகள்.
இவற்றை அனைத்தையும் ஒருங்கிணைந்த மற்றும் திறந்த அமைப்பில் இணைக்கிறது. இதனால், உங்கள் வீட்டில் விசாலமான, அமைதியான மற்றும் சமநிலையான வாழ்வியல் அனுபவம் கிடைக்கும். விஸ்தாரமான மாடி அமைப்பும் திறந்த இடங்களும், குடியிருப்பவர்களை அமைதியான பசுமை சூழலுடன் இணைக்கின்றன. அழகாக பராமரிக்கப்பட்ட தோட்டங்களின் காட்சிகளை இடையறாது அனுபவிக்கலாம். இயற்கை ஒளியும் மென்மையான காற்றும் ஒவ்வொரு மாடியிலும் சுலபமாக நுழைந்து, சுறுசுறுப்பான மற்றும் இலகுவான சூழலை உருவாக்குகின்றன. இது உங்கள் ஆறுதலையும் உடல்நலத்தையும் மேம்படுத்துகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் தனிப்பட்ட லிப்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்து மாடிகளுக்கும் எளிதாக செல்ல உதவுகிறது மற்றும் வாழ்க்கையின் எல்லா கட்டங்களிலும் சுகமான வசதியை வழங்குகிறது. இயற்கையை மையமாகக் கொண்டு கவனமாக வடிவமைக்கப்பட்ட இந்த வீடுகள், அழகு, அமைதி மற்றும் நவீன வாழ்க்கை அனைத்தும் ஒன்றாக இணையும் அமைதியான வாழ்விடமாக இருக்கும்.
இடத்தின் முக்கிய அம்சங்கள்:
வசதிகள்:
தனியான வெளிப்புற சமையலறை.
முற்றத்தை மையமாகக் கொண்ட புதிய வாழ்க்கை அனுபவம்.
இந்த தனித்துவமான வீடுகளின் முழு விபரங்கள், தனிப்பட்ட ஆலோசனையின் மூலம் பகிரப்படும். இன்றே உங்கள் ஆலோசனையை முன்பதிவு செய்து, அமைதி, விசாலம் மற்றும் உயர்தர ஆடம்பரத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த வீட்டை அனுபவியுங்கள்.
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.