logo

பிரைம் லேண்ட்ஸ் பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகள்

ப்ரைம் லேண்ட்ஸின் சமீபத்திய மேம்பாடுகள் மற்றும் சாதனைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள். எங்கள் திட்டங்கள் மற்றும் மைல்கற்கள் பற்றி மேலும் அறிய எங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்கவும்.

2024-11-08

வேர்ள்ட் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் 2024 இல் இரண்டு விருதுகளை Prime Lands சுவீகரித்தது

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி செயற்பாட்டாளராகத் திகழும் Prime Lands (Pvt) Ltd, தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற வேர்ள்ட் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் 2024 இல் இரண்டு விருதுகளை சுவீகரித்துள்ளது. இலங்கையில் ஆண்டின் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் 2024 மற்றும் நிறுவனத்தின் புதிய நிர்மாணத் திட்டமான YOLO க்காக, இலங்கையின் ஆண்டின் சிறந்த ரியல் எஸ்டேட் செயற்திட்டம் 2024 ஆகிய விருதுகளை Prime Lands (Pvt) Ltd நிறுவனம் சுவீகரித்துள்ளது. இந்த விருதுகளினூடாக, புத்தாக்கம், சிறப்புக்கான ஈடுபாடு மற்றும் உலகத் தரம் வாய்ந்த நியமங்களை பேணுதல் போன்றவற்றினூடாக ரியல் எஸ்டேட் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி வரும் Prime Lands’ இன் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது.Prime Lands இன் ஸ்தாபகரும் குழும தவிசாளருமான பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடி எனும் வகையில், பாரம்பரிய வரையறைகளுக்கு அப்பாலான வசிப்பிட அனுபவங்களை ஏற்படுத்துவதில் Prime Lands எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தது. செங்கற்கள் மற்றும் சாந்துக் கலவையைக் கொண்டு கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு என்பதற்கு அப்பால் சென்று, கனவுகளுக்கான அடித்தளங்களை ஏற்படுத்தல், எதிர்பார்ப்புகளின் அரண்களை கட்டியெழுப்பல் மற்றும் எமது பிரத்தியேகமான வாடிக்கையாளர்களுக்கு வரையறைகளில்லாத வாய்ப்புகளுடனான கூரைகளை உருவாக்கல் போன்றவற்றில் எமது மூலோபாய தீர்மானம் தங்கியுள்ளது. தொழிற்துறையில் எம்மை அசல் நியமங்களை ஏற்படுத்துவோராக எம்மை நிலைநிறுத்துவதில் இந்த நோக்கு கைகொடுத்துள்ளதுடன், இலங்கையின் ரியல் எஸ்டேட் கட்டமைப்பை மாற்றியமைப்பதுடன், ஒப்பற்ற பெறுமதியை தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொடுப்பதில் பங்களிப்பு வழங்குகின்றது.” என்றார். மூன்று தசாப்தகாலமாக, நம்பிக்கையை வென்ற நிர்மாண வடிவமைப்பாளராக Prime Lands தொழிற்துறையில் முன்னிலையில் திகழ்வதுடன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சுதல் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் போன்றவற்றை தொடர்ந்தும் நிறைவேற்றுவதற்காக புகழ்பெற்றுள்ளது. நீடித்து நிலைத்திருக்கும் மரபுவழியை உருவாக்குவதுடன், சொகுசு. அதிசொகுசு. ஓய்வு மற்றும் வாழ்க்கைமுறை வசிப்பிடங்களை, தனது புரட்சிகரமான செயற்திட்டங்களினூடாக Prime Lands மாற்றியமைத்துள்ளது. இலங்கையில் நவீன இல்லத் தொடர்மனை நகரங்களை நிறுவும் நிலைக்கு நிறுவனம் வளர்ச்சியடைந்துள்ளதுடன், எதிர்கால தலைமுறைகளுக்கு வசிக்கக்கூடிய, அரவணைப்பான அயலவர் சூழலை உருவாக்கிய வண்ணமுள்ளது. மேலும், அலங்கார வடிவமைப்பு மற்றும் பலதுறைசார் நிபுணத்துவம் போன்றவற்றில்<span xss="remo

மேலும் வாசிக்க
“இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருது 2024” ஐ Prime Group சுவீகரித்தது

2024-10-03

“இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருது 2024” ஐ Prime Group சுவீகரித்தது

இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Group, பெருமைக்குரிய “இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருது” இனை சுவீகரித்துள்ளது. 19 ஆவது தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகள் 2024 நிகழ்வின் போது இந்த உயர் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டது. மனித வளங்கள் அபிவிருத்தி மற்றும் ஊழியர் நலன்பேணலுக்கான அர்ப்பணிப்பை கௌரவித்தும், நேர்த்தியான மற்றும் ஊக்குவிக்கும் பணிச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காகவும் இந்த உயர் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகளுக்கு மனித வளங்கள் தலைமைகளின் சர்வதேச கட்டமைப்பான World Federation of HR Professionals மற்றும் World HRD Congress ஆகியவற்றினால் சான்றளிக்கப்பட்டுள்ளது. அண்மைய சர்வதேச சவால்களுக்கு மத்தியில், மனித வளங்கள் செயற்பாடுகளில் சிறப்பை பின்பற்றியிருந்த நிறுவனங்களை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளன.நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடுகளின் பிரதான அரணாக கருதப்படும், ஊழியர்கள் மீது Prime Group கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. சிறந்த ஊழியர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதில் Prime Group இன் ஆற்றலை வரவேற்பதாக இந்த விருது அமைந்திருப்பதுடன், நிறுவனத்தின் நோக்கை நோக்கி பயணிக்கையில் அதில் அங்கம் பெறுவதையிட்டு ஊழியர்கள் பெருமையாக உணர்வதை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.Prime Lands Residencies PLC., Prime Group நிறைவேற்று பணிப்பாளர் ஷெஹானா பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “எமது சிறந்த சொத்தக, எம் ஊழியர்கள் அமைந்துள்ளனர். அவர்களின் நலன் என்பது எமது பிரதான முன்னுரிமையாகும். மகிழ்ச்சியான ஊழியர்களால் எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனத்தில் சிறந்த அக்கறை கொள்ளப்படும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.சிறந்த ஊழியர் வர்த்தக நாமமாக Prime Group தெரிவு செய்யப்பட்டமையில், எதிர்காலத்துக்கு தயாரான பணியாளர்களை கட்டியெழுப்புவது மற்றும் சவால்களு

மேலும் வாசிக்க

எமது துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி