2024-10-03
இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Group, பெருமைக்குரிய “இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருது” இனை சுவீகரித்துள்ளது. 19 ஆவது தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகள் 2024 நிகழ்வின் போது இந்த உயர் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டது. மனித வளங்கள் அபிவிருத்தி மற்றும் ஊழியர் நலன்பேணலுக்கான அர்ப்பணிப்பை கௌரவித்தும், நேர்த்தியான மற்றும் ஊக்குவிக்கும் பணிச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காகவும் இந்த உயர் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகளுக்கு மனித வளங்கள் தலைமைகளின் சர்வதேச கட்டமைப்பான World Federation of HR Professionals மற்றும் World HRD Congress ஆகியவற்றினால் சான்றளிக்கப்பட்டுள்ளது. அண்மைய சர்வதேச சவால்களுக்கு மத்தியில், மனித வளங்கள் செயற்பாடுகளில் சிறப்பை பின்பற்றியிருந்த நிறுவனங்களை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளன.
நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடுகளின் பிரதான அரணாக கருதப்படும், ஊழியர்கள் மீது Prime Group கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. சிறந்த ஊழியர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதில் Prime Group இன் ஆற்றலை வரவேற்பதாக இந்த விருது அமைந்திருப்பதுடன், நிறுவனத்தின் நோக்கை நோக்கி பயணிக்கையில் அதில் அங்கம் பெறுவதையிட்டு ஊழியர்கள் பெருமையாக உணர்வதை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.
Prime Lands Residencies PLC., Prime Group நிறைவேற்று பணிப்பாளர் ஷெஹானா பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “எமது சிறந்த சொத்தக, எம் ஊழியர்கள் அமைந்துள்ளனர். அவர்களின் நலன் என்பது எமது பிரதான முன்னுரிமையாகும். மகிழ்ச்சியான ஊழியர்களால் எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனத்தில் சிறந்த அக்கறை கொள்ளப்படும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
சிறந்த ஊழியர் வர்த்தக நாமமாக Prime Group தெரிவு செய்யப்பட்டமையில், எதிர்காலத்துக்கு தயாரான பணியாளர்களை கட்டியெழுப்புவது மற்றும் சவால்களு
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி