logo

2024-08-31

இலங்கையின் முதலாவது நவீன தனிவீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு நகரமான பிரைம் குரூப்பின் "YOLO" திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பம்

இலங்கையின் முன்னணி அசையாச் சொத்து அபிவிருத்தியாளர்களில் ஒன்றான பிரைம் குரூப் (Prime Group), கிருளப்பனை/கிரிபத்கொட பகுதியில் அமையவுள்ள, நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆடம்பரமான முதலாவது நவீன தனிவீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு நகரமாக கருதப்படும் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "YOLO" திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடியுள்ளது.

கொழும்பின் நகர்ப்புற வானலையை மறுவரையறை செய்யவுள்ள இந்த தனித்துவமான வாழ்க்கை முறை அனுபவத்தின் கட்டுமானப் பணிகளின் உத்தியோகபூர்வ ஆரம்பத்தை இந்த அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை குறித்ததுடன், இது ஒரு துடிப்பான மற்றும் பிரத்தியேகமான சமூகத்திற்கான புதிய தரநிலைகளை உருவாக்கும் ஒரு அற்புதமான பயணத்தின் தொடக்கமாகும். YOLO திட்டத்தின் கட்டுமானப் பணிகள், கட்டிட செயல்முறை முழுவதும் தரம் மற்றும் நம்பகத்தன்மையின் மிக உயர்ந்த தரநிலைகளை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும்.

இந்நிகழ்வில் பிரைம் குரூப் தலைவர் மற்றும் இணைத் தலைவி ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பெருமைமிக்க எதிர்கால வீட்டு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் குறித்து பிரைம் லேண்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் [Prime Lands (Pvt) Ltd] பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ருமின்த ரந்தெனிய தனது உத்வேகத்தை வெளிப்படுத்துகையில்: "YOLO திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா மூலம், நாங்கள் வெறும் கட்டுமானப் பணிகளை மட்டும் தொடங்கவில்லை - இலங்கையில் நவீன நகர்ப்புற வாழ்க்கையின் எதிர்காலத்திற்கான ஒரு தொலைநோக்குப் பார்வையை நாங்கள் ஆரம்பிக்கிறோம். நாங்கள் வாக்குறுதியளித்ததை மட்டுமல்லாமல், அதற்கும் மேலாக வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்களது தனித்துவமான 1% கட்டணத் திட்டம் (1% payment plan) முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கதவுகளைத் திறக்கிறது, இது சொத்து உரிமையை முன்னெப்போதையும் விட எளிதாக்குகிறது. இந்த புதுமையான அணுகுமுறை பிரைம் குரூப்பின் வலுவான நிதி ஸ்திரத்தன்மையின் காரணமாக மட்டுமே சாத்தியமாகியுள்ளது." என்றார்.

கிரிபத்கொடவில் அமைந்துள்ள YOLO திட்டம் 13 ஏக்கர் பரப்பளவில், 476 நேர்த்தியான குடியிருப்புகளைக் கொண்டுள்ளதோடு, குடியிருப்பு அடுக்குமாடித் திட்டமொன்றில் இலங்கையிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் பல சிறப்பம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. அதில் பிரமிக்க வைக்கும் இன்ஃபினிட்டி நீச்சல் தடாகம் (infinity pool), பிரீமியம் பௌலிங் விளையாட்டு தளம் (bowling alley), திறந்தவெளி திரையரங்கு கருத்தைக் கொண்ட சினிமா, காபி வேலைத்தளம் (coffee workspace), நெருப்பு மூட்டும் வசதி (fire pit) கொண்ட சொகுசு லவுஞ்ச், பசுமையான தோட்டங்கள் மற்றும் முன்றில்கள், கரோக்கி பார் (Karaoke Bar), உடற்பயிற்சி கூடம் மற்றும் கிராஸ்ஃபிட் மையம் (gym and CrossFit centre), பெடில் டென்னிஸ் மைதானம், நாணயங்கள் மூலம் இயங்கும் சலவை நிலையம் மற்றும் மினி-மார்ட் உள்ளிட்ட பல தனித்துவமான உள்கட்டமைப்பு வசதிகள் இதில் அடங்கியுள்ளன.

இந்த விதிவிலக்கான திட்டத்தின் ஒரு பகுதியாக மாற விரும்பும் எதிர்கால வீட்டு உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், தங்களது குடியிருப்புகளை முன்பதிவு செய்ய YOLO இல் உள்ள விற்பனை காட்சியகத்திற்கு (Sales Gallery) வருமாறு அழைக்கப்படுகிறார்கள். அதன் புதுமையான வடிவமைப்பு, பிரதான அமைவிடம் மற்றும் நெகிழ்வான கட்டண விருப்பங்களுடன், கொழும்பின் அசையாச் சொத்து சந்தையில் YOLO ஒரு இணையற்ற வாய்ப்பை பிரதிபலிக்கிறது.

கூடுதல் தகவல்களுக்கு அல்லது YOLO இல் ஒரு குடியிருப்பை முன்பதிவு செய்ய, 0702 041 041 என்ற எண்ணில் பிரைம் குரூப்பைத் தொடர்பு கொள்ளவும் அல்லது www.primelands.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

Related News

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.