logo

2024-08-05

இலங்கையின் முதலாவது நவீன இல்லத் தொடர்மனை நகராக Prime Group இன் YOLO இனால் “Playful Luxury” உறுதி செய்யப்பட்டுள்ளது

-          கிரிபத்கொட நகருக்கும், கடவத்த அதிவேக நெடுஞ்சாலை பிரவேசத்துக்கும் அருகாமையில் அமைந்துள்ளது

-          YOLO இல் உங்களுக்காக இல்லத்தை ஒதுக்கிக் கொள்ள மாதாந்தம் 1% மட்டும் செலுத்துங்கள்!

சாதாரண வாழ்க்கை முறையிலிருந்து மாறி, சொகுசான வாழ்க்கை முறைக்குச் செல்ல நீங்கள் தயாரா? YOLO உங்களை அழைக்கின்றது. இலங்கையின் முதலாவது நவீன இல்லத் தொடர்மனை நகராக, நவீன விநோத அம்சங்கள் நிறைந்த வலயத்தை YOLO கொண்டிருக்கும். வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமல்ல. வாழ்வது ஒரு தடவை மாத்திரமே எனும் தொனிப்பொருளுக்கு பொருத்தமான வாழ்க்கை முறையை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த நவீன தொடர்மனை நகர் அமைந்திருக்கும்.

13 ஏக்கர் காணியில், 476 சொகுசு இல்லங்கள் நிறுவப்பட்டு, உங்களின் வாழ்க்கை முறையை மாற்றவுள்ளன. நகரிலிருந்து சற்று அப்பால் அமையவுள்ள YOLO, ஒப்பற்ற சௌகரியத்தை பெற்றுக் கொடுக்கும் ஒரு சமூக அமைப்பாக அமைந்திருக்கும். கொழும்பிலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவிலும், கிரிபத்கொட நகருக்கு 10 நிமிடங்களில் பயணிக்கக்கூடிய வகையில், கடவத்த அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து 4.5 கிலோமீற்றர் தூரத்திலும், கட்டுநாயக்க விமான நிலையத்தை 15 நிமிடங்களில் சென்றடையக்கூடிய வகையிலும் நிறுவப்படவுள்ளது.

YOLO இல் அமைவிடம் என்பதற்கு அப்பால், சொகுசான அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் பலதும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றில் Infinity pools முதல் Sky lounges போன்றன அடங்கியுள்ளன. ஒவ்வொரு தேவைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் YOLO இனால் சொகுசான அனுபவத்தை பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் அமையவுள்ள Infinity pool இல் இருந்தவாறே, மனம்மறவாத அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதுடன், இனிய சூழலில் அதனுள் இருந்தவாறே பானங்களை அருந்தி மகிழ முடியும். இலங்கையின் முதலாவது வசிப்பிடத்தில் அமைந்த Bowling alley வசதியும் இங்கு நிறுவப்படும்! புத்தாக்கமான Outdoor Theater முறையினூடாக நட்சத்திரங்களின் கீழ் சினிமா அனுபவத்தைப் பெறுங்கள். விறுவிறுப்பான Coffee workspace பகுதியில் உங்களின் சக பணியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

இரவு வேளைப் பொழுதுகளை இனிதாக்கும்

Related News

எமது துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி