2024-03-06
Sinhala:
සුඛෝපභෝගී නිවාස සහ උසස් ජීවන රටාවන් කරා යන ගමනේ නව යුගයක් සනිටුහන් කරමින්, මෙරට දේපළ වෙළඳාම් ක්ෂේත්රයේ ප්රමුඛයා වන ප්රයිම් ලෑන්ඩ්ස් (පුද්) සමාගම [Prime Lands (Pvt) Ltd], තලවතුගොඩ නගර මධ්යයේ පිහිටි සමගි මාවතේ ඉදිවන සිය නවතම කීර්තිමත් නිවාස ව්යාපෘතිය වන ‘The Residence' හි මුල්ගල තැබීමේ මංගල උත්සවය අභිමානවත් අන්දමින් පවත්වා ඇත.
මෙම නව නේවාසික ව්යාපෘතියේ ඉදිකිරීම් කටයුතු නිල වශයෙන් ආරම්භ කිරීම සනිටුහන් කරමින් පැවැත්වුණු මෙම උත්සවය සඳහා සමාගමේ සභාපති, සම-සභාපතිනී, නිවාස හිමියන් සහ ප්රයිම් කණ්ඩායමේ සාමාජිකයින් පිරිසක් සහභාගී වූහ.
මෙහිදී රැස්ව සිටි පිරිස අමතමින් ප්රයිම් ලෑන්ඩ්ස් (පුද්) සමාගමේ සම-සභාපතිනී සඳමිණි පෙරේරා මහත්මිය මෙසේ ප්රකාශ කළාය, "අපගේ පාරිභෝගිකයින් යනු අපගේ ව්යාපාරික හවුල්කරුවන්. අද දවස අපගේ ගමන් මඟෙහි තවත් එක් සුවිශේෂී සන්ධිස්ථානයක් සනිටුහන් කරනවා. ප්රයිම් සමූහය වෙනුවෙන් අපගේ සියලුම ආදරණීය පාරිභෝගිකයින්ට මම මාගේ හෘදයාංගම ස්තූතිය පුද කර සිටිනවා. ඔබගෙන් බොහෝ දෙනෙක් මෙම ව්යාපෘතිය වෙළඳපලට හඳුන්වා දීමටත් පෙර, නිසි සැලසුමක් පවා නොදැක මෙහි නිවසක් මිලදී ගැනීමට තීරණය කළා. මෙයින් පැහැදිලි වන්නේ ප්රයිම් සන්නාමය කෙරෙහි ඔබ තබා ඇති අසීමිත විශ්වාසයයි. ඔබගෙන් බහුතරයක් දෙනා විශ්වාසදායක ඉඩම් සහ සුවපහසු නිවාස සොයා කාලාන්තරයක් තිස්සේ අප සමඟ රැඳී සිටින අපගේ පැරණි පාරිභෝගිකයින්. අද දවසේ මම ඔබට එක පොරොන්දුවක් වෙනවා; අපගේ පළපුරුදු සහ දක්ෂ කණ්ඩායම සමඟ එක්ව, ඔබේ පරිකල්පනය සහ අපේක්ෂාවන් ඉක්මවා යන අලංකාර මෙන්ම මනරම් නිවසක් ඔබට උරුම කර දීමට අපි කැපවී සිටිනවා."
පාරිභෝගිකයින්ගේ පහසුව සහ නම්යශීලීභාවය තවදුරටත් ඉහළ නංවමින්, මෙම ව්යාපෘතිය සඳහාම විශේෂයෙන් සකස් කරන ලද ගෙවීමේ ක්රමවේදයක් හඳුන්වා දී ඇත. ඒ අනුව, ශ්රී ලංකාවේ දේපළ වෙළඳාම් ක්ෂේත්රයේ ප්රථම වතාවට ප්රයිම් සමූහය විසින් හඳුන්වා දුන් විප්ලවීය මසකට 1%ක වාරික ගෙවීමේ ක්රමය (1% monthly installments) ‘The Residence’ ව්යාපෘතිය සඳහා ද අදාළ කර ඇති බැවින්, ඕනෑම අයෙකුට මෙහි නිවසක් මිලදී ගැනීමේ අවස්ථාව හිමි වේ. සුවිශේෂී කරුණක් වන්නේ, මෙම නව ව්යාපෘතියේ නිවාසවලින් 80%ක්ම මේ වන විටත් විකිණී අවසන්ව තිබීමයි.
තලවතුගොඩ නගර මධ්යයේ පිහිටි ‘The Residence' ව්යාපෘතිය, පාරිභෝගිකයින්ට නාගරික පහසුකම් සපයන අතරම සන්සුන් සහ නිදහස් පරිසරයක ජීවත් වීමට කදිම නවාතැනක් ලෙස නිර්මාණය කර ඇත. කාර්යබහුල නගරයක උපායමාර්ගිකව පිහිටා ඇති මෙම ව්යාපෘතිය හරහා සාප්පු සවාරි, ආපනශාලා සහ විනෝදාස්වාද මාධ්යයන් වෙත පහසුවෙන් ළඟා විය හැකි බැවින්, එය ආයෝජනයක් සඳහා මෙන්ම පදිංචිය සඳහා ද කදිම තේරීමක් වේ.
මෙම ව්යාපෘතියේදී උපරිම භූමි අවකාශය ප්රයෝජනයට ගැනීමටත්, සාධාරණ අයවැයක් තුළ උසස් තත්ත්වයේ ඉදිකිරීම් සිදු කිරීමටත් මූලිකත්වය දී ඇත. ප්රයිම් ලෑන්ඩ්ස් විසින් භාවිත කරන සුවිශේෂී සැලසුම්කරණය හේතුවෙන් ඉඩම කාර්යක්ෂමව භාවිත කිරීමට හැකි වන අතර, ඉදිකිරීම්වල ගුණාත්මකභාවයට කිසිදු හානියක් නොකර එහි පිරිවැය මනාව කළමනාකරණය කිරීමට ද උපකාරී වේ. එහි ප්රතිඵලයක් ලෙස, තලවතුගොඩ වැනි ඉහළ ඉල්ලුමක් පවතින ප්රදේශයක වටිනාකමෙන් ඉහළ, උසස් ප්රමිතියෙන් යුත් නිවසක් සාධාරණ මිලකට ලබා දීමට ප්රයිම් සමාගමට හැකි වී තිබේ.
මෙම ව්යාපෘතියෙන් නිවසක් මිලදී ගත් ඩිමිත්රි පීරිස් මහතා සිය සතුට ප්රකාශ කරමින් මෙසේ පැවසීය, "‘The Residence' කියන්නේ මම ප්රයිම් සමූහයෙන් මිලදී ගත් පළමු නිවස නෙවෙයි. මම මීට පෙරත් ප්රයිම් ආයතනය සමඟ ආයෝජන කිහිපයක් කර තිබෙනවා වගේම ඔවුන් ලබා දෙන ගුණාත්මකභාවය සහ ආරක්ෂාව පිළිබඳව මම නිරන්තරයෙන් සෑහීමකට පත්වුණා. මම නැවතත් ප්රයිම් තෝරාගත්තේ ඒ නිසයි. මම මෙම පරිශ්රය නැරඹීමට පැමිණි විට එහි ඇති සන්සුන් සහ සුන්දර වටපිටාව මගේ සිහින නිවහන පිළිබඳ අනාගත බලාපොරොත්තු තවදුරටත් තහවුරු කළා. ප්රයිම් සමාගම නිරන්තරයෙන්ම උසස් සහ ආරක්ෂිත නිවාස ලබා දෙන බවට මා තුළ ඇති විශ්වාසය නිසා මට මෙම තීරණය ගැනීම ඉතා පහසු වුණා. විකුණුම් කටයුතුවලින් පසුව පවා ඔවුන් පාරිභෝගිකයා වෙනුවෙන් දක්වන කැපවීම ඔවුන් කෙරෙහි ඇති විශ්වාසය තවදුරටත් ශක්තිමත් කරනවා."
‘The Residence' වෙතින් නිවසක් මිලදී ගැනීම, සන්සුන් ජීවන වටපිටාවක් පමණක් නොව නාගරික පහසුකම් සහ ස්වභාවික පරිසරයේ පරිපූර්ණ එකතුවක් ද ලබා දෙන බැවින්, තලවතුගොඩ ප්රදේශයෙන් පහසු සහ සුවපහසු ජීවන රටාවක් අපේක්ෂා කරන සැමට මෙය කදිම තේරීමකි.
Tamil:
சொகுசு வீடமைப்பு மற்றும் மேம்பட்ட வாழ்க்கை முறையை நோக்கிய புதிய யுகத்தை ஆரம்பிக்கும் வகையில், அசையாச் சொத்துத் துறையின் முன்னணி நிறுவனமான பிரைம் லேண்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் [Prime Lands (Pvt) Ltd], தலவத்துகொடவின் மையப்பகுதியில் அமைந்துள்ள சமகி மாவத்தையில் அமையவுள்ள அதன் புதிய மதிப்புமிக்க வீட்டுத் திட்டமான ‘The Residence' இன் அடிக்கல் நாட்டு விழாவை பெருமையுடன் நடத்தியுள்ளது.
புதிய குடியிருப்பு திட்டத்தின் கட்டுமானப் பணிகளின் ஆரம்பத்தைக் குறிக்கும் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் நிறுவனத்தின் தலைவர், இணைத் தலைவி, வீட்டு உரிமையாளர்கள் மற்றும் பிரைம் குழுவினர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பிரைம் லேண்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இணைத் தலைவி சந்தாமினி பெரேரா உரையாற்றுகையில், “எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களது வணிகப் பங்காளிகள் ஆவர். இன்றைய நாள் எங்களது பயணத்தில் மற்றொரு மைல்கல்லாகும். பிரைம் குரூப் சார்பாக எங்களது அன்பிற்குரிய பங்காளிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களில் பலர் எங்களது புதிய திட்டத்தின் சரியான வடிவமைப்பைக் கூட பார்க்காமல், அது சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே அதில் ஒரு வீட்டை வாங்க முடிவு செய்தீர்கள். இது பிரைம் சன்னாமத்தின் மீது நீங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. உங்களில் பெரும்பாலோர் எங்களது நீண்டகால வாடிக்கையாளர்கள், அவர்கள் எங்களிடமிருந்து நம்பகமான நிலத்தையும் வசதியான வீடுகளையும் எதிர்பார்த்தனர். இன்று நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதியை அளிக்க விரும்புகிறேன்; எங்களது அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான குழுவுடன் இணைந்து, உங்களது கற்பனை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட நேர்த்தியான, அழகான இல்லத்தை உங்களுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.” என்றார்.
வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் நெகிழ்வுத்தன்மையை முன்னிலைப்படுத்தி, இத்திட்டத்திற்காக வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு கட்டணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் அசையாச் சொத்துத் துறையிலேயே முதன்முறையாக பிரைம் குரூப் அறிமுகப்படுத்திய புரட்சிகரமான 1% மாதாந்திர தவணைக் கட்டணத் திட்டம் (1% monthly installments) ‘The Residence’ திட்டத்திற்கும் உள்ளடக்கப்பட்டுள்ளதால், அனைவரும் இத்திட்டத்தை எளிதாக அணுக முடியும். மிக முக்கியமாக, இந்த புதிய திட்டத்தின் 80% குடியிருப்புகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.
தலவத்துகொடவின் இதயப்பகுதியில் அமையவுள்ள ‘The Residence' திட்டம், குடியிருப்பாளர்களுக்கு நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அமைதியான வாழ்வாதார சூழலை வழங்கும் ஒரு புகலிடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. துடிப்புடன் இயங்கும் நகரின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளதால், இத்திட்டம் ஷாப்பிங், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களை எளிதாக அணுகும் வசதியை வழங்குகிறது, இதனால் இது முதலீட்டிற்கும் குடியிருப்பதற்கும் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
நிலப்பரப்பை அதிகளவில் பயன்படுத்துவதற்கும், நியாயமான வரவுசெலவுத் திட்டத்திற்குள் உயர்தர கட்டுமானத்தை வழங்குவதற்கும் இத்திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பிரைம் லேண்ட்ஸ் பயன்படுத்தும் தனித்துவமான வடிவமைப்பு திறமையான நிலப் பயன்பாட்டை சாத்தியமாக்குவதுடன், கட்டுமானத் தரத்தில் சமரசம் செய்யாமல் செலவுகளையும் திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. இதன் விளைவாக, தலவத்துகொட போன்ற உயர்தரப் பகுதியில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சிறந்த தரமான வீடுகளை நியாயமான விலையிலும் மதிப்பிடலிலும் பிரைம் நிறுவனத்தால் வழங்க முடிகிறது.
இத்திட்டத்தில் புதிய வீட்டை வாங்கியுள்ள வாடிக்கையாளரான டிமித்ரி பெய்ரிஸ் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கையில், “பிரைம் குரூப் உடன் நான் வாங்கும் முதல் இல்லம் இதுவல்ல. நான் கடந்த காலங்களில் பிரைம் நிறுவனத்துடன் பல முதலீடுகளைச் செய்துள்ளேன், அவர்கள் வழங்கும் தரம் மற்றும் பாதுகாப்பில் நான் எப்போதும் திருப்தி அடைந்துள்ளேன். அதனால்தான் நான் மீண்டும் பிரைம் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தேன். இப் பகுதியை பார்வையிட்டபோது, இது மிகவும் அமைதியாகவும் வரவேற்புடையதாகவும் இருந்தது, எனது புதிய இல்லத்தின் எதிர்கால சாத்தியக்கூறுகளை என்னால் கற்பனை செய்ய முடிந்தது. உயர்தர மற்றும் பாதுகாப்பான வீடுகளை வழங்குவதில் நான் பிரைம் நிறுவனத்தை முழுமையாக நம்புகிறேன், இது எனது முடிவை எளிதாக்கியது. விற்பனைக்கு பின்னரும் இக்குழுவினர் காட்டும் அர்ப்பணிப்பு அவர்கள் மீதான எனது நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது.” என்றார்.
‘The Residence' இல் ஒரு வீட்டை வாங்குவது அமைதியான வாழ்க்கைச் சூழலை மட்டுமல்லாமல், நகர்ப்புற வசதிகள் மற்றும் இயற்கைச் சூழலின் சரியான கலவையையும் வழங்குவதால், தலவத்துகொடவில் வசதியான மற்றும் சௌகரியமான வாழ்க்கை முறையைத் தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.