logo

2024-02-06

Prime Group தனது புதிய Prime Villas, Dalugama தொகுதியை உரிமையாளர்களிடம் கோலாகலமாக கையளித்திருந்தது

இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் வடிவமைப்பாளரான Prime Group, அதன் புதிய நிர்மாணத் தொகுதியான Prime Villas, Dalugama வின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்து அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வை அண்மையில் கோலாகலமாக கொண்டாடியிருந்தது. இந்நிகழ்வு 2024 பெப்ரவரி 3 ஆம் திகதி நடைபெற்றதுடன், Prime Group இனால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களில் புதிய உள்ளடக்கமாகவும் அமைந்துள்ளது.

 

 

2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட Prime Villas, Dalugama, பழைய கண்டி வீதியின் அருகில் அமைந்திருப்பதுடன், மூன்று வகையான 3-படுக்கைஅறை வசதிகளைக் கொண்ட விலாக்களை கொண்டுள்ளது. வசிப்போருக்கு சௌகரியம் மற்றும் நவீன அம்சங்களை வழங்குவதை நோக்காகக் கொண்டு இந்த வதிவிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த விலாக்களின் புதிய உரிமையாளர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்கையில், விலா இல. 11 ஐச் சேர்ந்த செஹானி சமரசிங்க குறிப்பிடுகையில், “நிர்மாணப் பகுதியில் Prime உடன் ஒப்பற்ற அனுபவத்தை நான் அனுபவித்திருந்தேன். இன்று பூர்த்தி செய்யப்பட்ட எனது இல்லத்தைக் காண்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என்றார். விலா இல. 07 ஐச் சேர்ந்த சமன் பெரேரா குறிப்பிடுகையில், “இந்த முதலீட்டை பூர்த்தி செய்வதற்கு, எமக்கு கிடைத்திருந்த நெகிழ்ச்சியான கொடுப்பனவுத் தெரிவுகள் பெரிதும் உதவியாக அமைந்திருந்தது.” என்றார். விலா இல. 6 ஐச் சேர்ந்த திஸ்ஸ எதிரிசிங்க குறிப்பிடுகையில், “அமைதியான மற்றும் இரம்மியமான சூழலில் அமைந்த அழகிய செயற்திட்டமாக இது அமைந்துள்ளது.” என்றார். விலா இல. 8 ஐச் சேர்ந்த சுமுது துஷாரி குறிப்பிடுகையில், “Prime ஒரு புகழ்பெற்ற சொத்து வடிவமைப்பு நிறுவனம் எனும் காரணத்தினால் நான் ஒரு அலகை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்தேன். நம்பிக்கையை வென்ற நாமம், மனதுக்கு நிம்மதியை வழங்குவதாக இருக்கும்.” என்றார்.

 

 

இந்த இல்லங்களில் காணப்படும் பிரதான உள்ளம்சங்களில் 2 வாகனத் தரிப்பிட வசதி, முழுமையாக பொருத்தப்பட்ட சமையலறைத் தொகுதி, சுடு நீர் வசதி, முறையாக வடிவமைக்கப்பட்ட தோட்டப் பகுதி, 24x7 பாதுகாப்பு வசதி, நீச்சல் தடாகம், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதி மற்றும் செல்லப் பிராணிகளுக்கான சூழல் போன்றன அடங்கியுள்ளன. கேந்திர முக்கியத்துவம்

Related News

எமது துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி