logo

2023-05-19

இலங்கையின் உன்னதத்தை பறைசாற்றும் வகையில், பிரைம் குரூப் (Prime Group) தனது மிகச்சிறந்த படைப்பான ‘The Grand Ward Place’ திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது

பிரைம் குரூப்பின் (Prime Group) அத்தியாவசிய மற்றும் மிக ஆடம்பரமான முதன்மை திட்டமான ‘The Grand Ward Place’ அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் திட்ட பங்காளர்களின் பங்களிப்புடன் 2023 மே 15 அன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு 7 இல் அமைந்துள்ள ஒரேயொரு வானளாவிய குடியிருப்பு வளாகமான ‘The Grand Ward Place’, அதன் குடியிருப்பாளர்களின் உயர்தர வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் பென்ட்ஹவுஸ்கள் (penthouses) மற்றும் அசைக்க முடியாத தனியுரிமை மற்றும் மூச்சுத்திணற வைக்கும் நகரக் காட்சியைக் கொண்ட ஒரு உண்மையான கலைப்படைப்பாகும்.

இந்த திறப்பு விழாவுடன், இணக்க சான்றிதழ் (COC), CMA பதிவு சான்றிதழ் மற்றும் பிரகடனப் பத்திரம் (Deed of Declaration) உள்ளிட்ட முக்கிய சட்ட ஆவணங்களை வெற்றிகரமாகப் பெற்றுக்கொண்டமையும் குறிக்கப்பட்டது. தற்போதைய அசையாச் சொத்துத் துறை எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும், குடியிருப்பாளர்கள் தங்களது குடியிருப்புகளின் சாவிகளைப் பெற்றுக்கொள்ளும் போதே, உரிமைப் பத்திரங்களை தங்களது பெயருக்கு உடனடியாக மாற்றிக்கொள்ள முடிந்தது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற Property Guru Asia Property Awards இல் இலங்கையின் சிறந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு (Best Luxury Condominium) என முடிசூட்டப்பட்ட ‘The Grand Ward Place’, குடியிருப்பாளர்களுக்கு அதிகபட்ச வசதி மற்றும் சௌகரியத்தை உறுதி செய்யும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பல உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குகிறது. உலகின் சிறந்த பிராண்டுகளின் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் நவீன குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இரண்டு வாகன நிறுத்துமிட வசதிகளுடன் (two car parks) கட்டப்பட்டுள்ள இங்குள்ள விசாலமான குடியிருப்புகள் ஆடம்பரத்தை பறைசாற்றுகின்றன.

‘The Grand Ward Place’ இல் 71 மீட்டர் நீளத்தைக் கொண்ட, இலங்கையின் மிக நீளமான உயரத்தில் அமைந்த இன்ஃபினிட்டி நீச்சல் தடாகம் (elevated infinity pool) அமைந்துள்ளது. நாட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் பொழுதுபோக்கிற்காக ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய இடத்தை உருவாக்குவதன் மூலம், மூன்று மாடிகளில் பரந்து விரிந்துள்ள 50,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் அதிநவீன பொழுதுபோக்கு வசதிகள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. 3 நீச்சல் தடாகங்கள், விளையாட்டு மைதானங்கள், இறகுப்பந்து மைதானங்கள், விழா மண்டபம், விளையாட்டு அறைகள், நடைபாதைகள், யோகா தளம், ஸ்பா (spa) மற்றும் மினி-மார்ட் உள்ளிட்ட பல வசதிகளுடன் ‘The Grand Ward Place’ துரிதமாக இயங்கும் நகரத்தின் மத்தியில் ஒரு அமைதியான புகலிடத்தை உருவாக்குகிறது.

இது குறித்து பிரைம் குரூப் குழுமத் தலைவர் பிராமணகே பிரேமலால் கூறுகையில், "கொழும்பு நகரின் மிக ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஒரு புதிய தரநிலையை உருவாக்கும் ஒரு தனித்துவமான மைல்கல்லான ‘The Grand Ward Place’ ஐ திறந்து வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஈஸ்டர் தாக்குதல், கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் மற்றும் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய ஆடம்பர பிராண்டுகளுக்கு இணையாக உயர்தரத்துடனும் தரநிலைகளுடனும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருப்பது பிரைம் குரூப்பின் அசைக்க முடியாத வலிமையைக் காட்டுகிறது. இந்த சாதனை எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்க்கை இடங்களை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை மட்டுமல்லாமல், எமது வாடிக்கையாளர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் எமது அனைத்து பங்காளர்களின் ஆதரவையும் உறுதிப்படுத்துகிறது." என்றார்.

உள்ளூர் அசையாச் சொத்துத் துறையின் இணையற்ற தலைவரும், முற்றிலும் இலங்கை நிறுவனமுமான பிரைம் குரூப், இந்த அசாதாரண கலைப்படைப்பை நிறைவு செய்வதற்காக இலங்கையின் முன்னணி பிராண்டுகளுடன் கைகோர்த்ததில் பெருமிதம் கொள்கிறது. இந்த கட்டிடக்கலை அதிசயம் வெற்றிகரமான கூட்டாண்மையின் ஆற்றலை வெளிப்படுத்துவதுடன், எதிர்காலத்திற்கும் ஒரு முன்மாதிரியான இலங்கை வெற்றிக் கதையாகும்.

பிரைம் குரூப் இணைத் தலைவி சந்தாமினி பெரேரா மேலும் கூறுகையில், "திட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அனைத்து விதிமுறைகளுக்கும் இணங்க செயல்பட்டதன் காரணமாக, எமது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் குடியிருப்புகளின் சாவிகளை வழங்கும் அதே நேரத்தில் தெளிவான உரிமைப் பத்திரங்களையும் ஒப்படைக்க எம்மால் முடிந்தது. ‘The Grand Ward Place’ என்பது பிரைம் குரூப்பின் மிகப்பெரிய முதலீடாகும், மேலும் உலகளாவிய ஆடம்பர வாழ்க்கை திட்டங்களுக்கு இணையாக நாட்டின் முன்னணி அசையாச் சொத்து அபிவிருத்தியாளராக எமது வெற்றியை இது நிரூபிக்கிறது." என்றார்.

இத்துறையில் 27 ஆண்டுகால முதிர்ந்த அனுபவத்தைக் கொண்டுள்ள பிரைம் குரூப், அர்ப்பணிப்பு, தரம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றில் அசைக்க முடியாத நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளது. ‘The Grand Ward Place’ என்பது கொழும்பு நகரின் வானலையில் ஒரு புதிய அழகைச் சேர்த்து, இலங்கையின் முதன்மையான குடியிருப்பு முகவரியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு உன்னத திட்டமாகும்.

Related News

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.