logo

2024-06-14

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் சிறப்பான சேவைக்கான தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதற்கும் பிரைம் குரூப் (Prime Group) தனது காலி கிளையை புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்துள்ளது

காலி நகரின் மையப்பகுதியில் தனது வாடிக்கையாளர்களுக்கு மேலான சேவையை வழங்குவதற்காக, பிரைம் குரூப் (Prime Group) தனது காலி கிளையை இலக்கம் 66, ஹவ்லொக் வீதி, காலி என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்துள்ளது. இப்புதிய கிளை மூலோபாய ரீதியாக மிக முக்கிய இடத்தில் அமைந்துள்ளதோடு, நவீன தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளது. இது பிரைம் குரூப்பின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும், இது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட வசதி, நவீன உள்கட்டமைப்பு மற்றும் சிறந்த சேவையை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்கும் வசதியான அணுகலை வழங்குவதற்கும் புதிய கிளையின் உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. பிரைம் குரூப்பின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, கொடுப்பனவுகள் மற்றும் கொள்முதல் தொகுதிகளுக்கான தானியங்கி ERP தளத்தை ஒருங்கிணைத்தல் போன்ற பல முக்கிய மேம்பாடுகள் இப்புதிய கிளையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது காகிதப் பயன்பாட்டைக் குறைத்து, தரவு சார்ந்த கண்காணிப்பு மற்றும் சீரான பணிப்பாய்வு மூலம் வாடிக்கையாளர் கோரிக்கைகளை விரைவாகவும் தடையின்றியும் நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது குறித்து பிரைம் குரூப் இணைத் தலைவி சந்தாமினி பெரேரா கூறுகையில், "முதலீட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் விரும்பும் அசையாச் சொத்து மற்றும் வாழ்க்கை முறை தீர்வுகளை வழங்குவதில் முன்னோடிகளாக, காலி நகரின் இதயப்பகுதியில் உள்ள எமது புதிய இடத்திலிருந்து இந்த புதிய கட்டத்தை ஆரம்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எமது காலி கிளையின் இந்த இடமாற்றம் எமது வணிக விரிவாக்கம் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. எமது குழுமத் தலைவர் பிரேமலால் பிராமணகே அவர்களின் தொலைநோக்கு தலைமைத்துவத்திற்கும், எமது நிறுவனத்தை பாரிய உயரத்திற்கு கொண்டு சென்ற எமது பிரதம நிறைவேற்று அதிகாரி ருமின்த ரந்தெனிய அவர்களின் அர்ப்பணிப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்புதிய இடமானது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட வசதியையும் செயல்பாட்டுத் திறனையும் வழங்குவதோடு, எங்களை ஒரு தொழில்துறை தலைவராக தனித்து நிலைநிறுத்துகிறது." என்றார்.

தெற்கு கரையோரப் பகுதியில் வெலிகம உள்ளிட்ட பல புதிய திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரைம் குரூப் அறிவித்துள்ளது. மேலும், மாத்தறை உதார மாவத்தையில் அமையவுள்ள புதிய திட்டம் காலி - மாத்தறை பிரதான வீதியிலிருந்து 350 மீற்றர் தொலைவிலும், மாத்தறை நகரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் அனைத்து முக்கிய பாடசாலைகளுக்கு அருகாமையிலும் அமையவுள்ளது. இவை தவிர, ஹிக்கடுவ மற்றும் பின்னதுவ ஆகிய பகுதிகளிலும் புதிய குடியிருப்பு திட்டங்களை ஆரம்பிக்க பிரைம் குரூப் திட்டமிட்டுள்ளது.

தற்போது இலங்கையின் நம்பகமான அசையாச் சொத்து அபிவிருத்தியாளராக உருவெடுத்துள்ள பிரைம் குரூப், இந்த ஆண்டில் சர்வதேச சந்தைகள் மற்றும் புதிய வணிக வழிகளை நோக்கி தனது வளர்ச்சி வேகத்தை மேலும் துரிதப்படுத்த இலக்கு வைத்துள்ளது.

Related News

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.