logo

2024-05-28

பிரைம் குரூப்பின் "88 Residence கஹதுடுவ" திறந்த தினம் (Open Day), உன்னதமான வாழ்க்கை முறை அனுபவத்துடன் கூடிய கனவு இல்லங்களை சொந்தமாக்க வாய்ப்பளிக்கிறது

அனைவருக்கும் தங்களது கனவு இல்லங்களின் உரிமையை நனவாக்கும் உன்னத அர்ப்பணிப்புடன், உள்ளூர் அசையாச் சொத்துத் துறையின் மாபெரும் நிறுவனமான பிரைம் குரூப் (Prime Group), கஹதுடுவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டமான "88 Residence" இல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திறந்த தினத்தை (Open Day) நடத்தியது.

2024 மே 17 முதல் 19 வரை நடைபெற்ற இத் திறந்த தின நிகழ்வின் போது, வீடு வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள நேர்த்தியான மாதிரி வீட்டைப் பார்வையிட்டதுடன், பிரைம் குரூப்பின் ஒவ்வொரு படைப்பிலும் உள்ள சிறந்த கைவினைத்திறன் மற்றும் தரமான உள்கட்டமைப்பை நேரடியாகக் கண்டறிந்தனர்.

இந்த உடன்படிக்கையின் கீழ், வீடு வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் வீட்டின் மதிப்பில் 25% ஐ, அதாவது சுமார் 8 மில்லியன் ரூபாயை மட்டும் செலுத்தி 88 Residence இல் ஒரு வீட்டை முன்பதிவு செய்ய முடியும். அனைத்து சட்ட ஆவணங்களும் மற்றும் உரிமைப்பத்திர மாற்றங்களும் தயாராக உள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக அந்த வீட்டில் குடியேறும் அற்புதமான வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் முதலாம் ஆண்டிற்கான வட்டிச் செலவை பிரைம் குரூப் ஏற்கும். இப் புதிய கட்டணத் திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்காக HNB வங்கியின் பிரதிநிதிகளும் இத் திறந்த தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இது குறித்து பிரைம் லேண்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் [Prime Lands (Pvt) Ltd] விற்பனை செயல்பாடுகளுக்கான சிரேஷ்ட உதவி பொது முகாமையாளர் (Senior AGM) சுரங்க பெய்ரிஸ் கூறுகையில், “பிரைம் குரூப்பின் தாய் நிறுவனமான பிரைம் லேண்ட்ஸ் மற்றும் හැටන් නැෂනල් බැංකුව (HNB) ஆகியவற்றிற்கு இடையிலான மூலோபாய கூட்டாண்மை குறித்து வாடிக்கையாளர்களுக்கு எளிதாகத் தெரியப்படுத்துவதே இத் திறந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். இக் கட்டண முறையானது 88 Residence திட்டத்திற்கு மட்டுமல்லாமல், இக் குழுமத்தின் ஏனைய அனைத்து தனி வீட்டுத் திட்டங்களுக்கும் பொருந்தும். இந்த புரட்சிகரமான கட்டணத் திட்டத்தின் மூலம், சொந்த வீடு வாங்கும் கனவை முன்னெப்போதையும் விட எளிதாகவும் நனவாக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கு பிரைம் குரூப் ஒரு முக்கிய படியை எடுத்துள்ளது." என்றார்.

பிலியந்தலை, கஹதுடுவ பகுதியில் பசுமையான நெல் வயல்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இச் சொத்து, மிகவும் அமைதியான சூழலைக் கொண்டுள்ளது. அமைதியான இயற்கைக்கு மத்தியில் ஆடம்பர வசதிகளை வழங்கும் இச் சொத்து, இலங்கையின் அழகை ரசிப்பதற்கும் இயற்கையோடு இணைந்து வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் ஒரு சிறந்த புகலிடமாகும். ஒவ்வொரு இல்லமும் இயற்கையோடு வாழ்வதை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது. 24 மணி நேர பாதுகாப்பைக் கொண்ட இப் பாதுகாப்பான குடியிருப்பு வளாகம் (Gated Community) 25 வீடுகளை உள்ளடக்கியுள்ளது. 1,365 முதல் 1,572 சதுர அடி வரையிலான, 3 படுக்கையறைகளைக் கொண்ட 3 வெவ்வேறு வடிவமைப்பு மாதிரிகளில் இவ் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அமைதியான இயற்கைச் சூழலில் நவீன மற்றும் வசதியான வாழ்க்கை முறையை வழங்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

HNB வங்கியின் சில்லறை வங்கிச் சேவைகளின் தலைவர் (Head of Retail Banking) காஞ்சன கருணாகம கூறுகையில், “HNB வங்கியில், இலங்கையர்கள் தங்களது சொந்த வீட்டுக் கனவை நனவாக்குவதற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம். பிரைம் குரூப் உடனான எங்களது கூட்டாண்மை, வாடிக்கையாளர்களுக்கு ஒரு சொகுசு வீட்டை எளிதாகச் சொந்தமாக்கக்கூடிய பொருத்தமான கட்டணத் திட்டங்களை வழங்க உதவுகிறது. மதிப்புமிக்க 88 Residence இன் இத்திட்டத்திற்காக, நாங்கள் நிதித் தடைகளை நீக்கி, கனவு இல்லத்திற்கான வழியை எளிதாக்கியுள்ளோம்." என்றார்.

மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள இவ் வீடுகள் சமகால வசதிகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு இல்லத்திலும் நவீன விளக்குகள், வரவேற்பறை மற்றும் படுக்கையறைகளுக்கான சீலிங் விசிறிகள் மற்றும் கிரானைட் தளத்துடன் கூடிய முழுமையான சமையலறை வசதிகள் (Pantry) உள்ளடக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கை முறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இச் சொத்தானது 120 பஸ் வீதியிலிருந்து வெறும் 750 மீற்றர் தொலைவிலும், கொட்டாவையிலிருந்து 10 நிமிட பயணத் தூரத்திலும் எளிதில் அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ளது. அத்துடன், 2 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தக்ஷிண அதிவேக நெடுஞ்சாலைப் பிரவேசத்தின் மூலம் தீவின் தெற்கில் உள்ள முக்கிய நகரங்களை 88 Residence வாசிகள் எளிதாக சென்றடைய முடியும்.

நவீன ஆடம்பரமும் இயற்கையின் அமைதியும் இணைந்த ஒரு கனவு இல்லத்தின் அழகை அனுபவிக்க, கஹதுடுவ 88 Residence ஐ நோக்கி ஒரு பயணத்தை மேற்கொள்ளுமாறு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பிரைம் குரூப் அழைப்பு விடுக்கிறது.

Related News

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.