logo

2023-08-14

13 வது BestWeb.lk 2023 போட்டியில் தனது சிறந்த இணையத்தள செயல்பாட்டிற்காக மதிப்புமிக்க தங்க விருதை (Gold Award) 2 வது முறையாகவும் பிரைம் லேண்ட்ஸ் (Prime Lands) வென்றெடுத்துள்ளது

2020 ஆம் ஆண்டில் முதன்முறையாக 'Corporate' பிரிவில் மதிப்புமிக்க தங்க விருதை வென்றதைத் தொடர்ந்து, இலங்கையின் முன்னணி அசையாச் சொத்து நிறுவனமான பிரைம் லேண்ட்ஸ் (Prime Lands), தனது உத்தியோகபூர்வ நிறுவன இணையத்தளமான www.primelands.lk க்காக அண்மையில் நடைபெற்ற 13 வது BestWeb.lk 2023 போட்டியில் இரண்டாவது முறையாகவும் இப் புகழ்பெற்ற விருதை சுவீகரித்துள்ளது.

2023 ஆகஸ்ட் 09 அன்று இம்பீரியல் மொனார்க் (Imperial Monarch) ஹோட்டலில் நடைபெற்ற கோலாகலமான நிகழ்வில், டிஜிட்டல் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்னிலையில் பிரைம் லேண்ட்ஸிற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

BestWeb.lk இன் நடுவர் அளவுகோல்கள், இணையத்தளத்தின் படைப்பாற்றல், கிராபிக் வடிவமைப்பின் தரம், கலைத்திறன், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் உள்ளடக்கத்தின் தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்கின்றன.

இந்தச் சாதனையானது டிஜிட்டல் மேம்பாட்டில் பிரைம் லேண்ட்ஸின் இடைவிடாத முயற்சியை வெளிப்படுத்துகிறது. தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் நோக்கில், சொத்துக்களை தடையின்றி ஆராய்தல், 'Live Chat' மூலம் உடனடி உதவி மற்றும் 'Virtual Tours' போன்ற வசதிகளை இணையத்தளம் வழங்குகிறது. இது வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் தொழில்துறை தரங்களையும் நிர்ணயிக்கிறது.

இது குறித்து பிரைம் லேண்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ருமின்த ரந்தெனிய கூறுகையில், "வசதியான மற்றும் பயனாளர் நட்பு ரீதியான இணையத்தளத்தைக் கொண்டுள்ளதன் மூலம் பிரைம் லேண்ட்ஸ் இந்த உயர் மட்ட குழுவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும், அசையாச் சொத்துத் துறையில் புதுமைகளைப் புகுத்துவதிலும், இணையற்ற வசதி, நவீனத்துவம் மற்றும் நம்பிக்கையை உருவாக்குவதிலும் நிறுவனத்தின் தளராத அர்ப்பணிப்பிற்கு இந்த விருது ஒரு சான்றாகும். எமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைப் பயணத்தில் மகிழ்ச்சியையும் வெற்றியையும் தரும் ஒரு இல்லத்துடன் அவர்களை நேரடியாவும் டிஜிட்டல் ரீதியாகவும் இணைப்பதற்கான எமது முயற்சியை இந்தத் தங்க விருது உறுதிப்படுத்துகிறது." என்றார்.

பிரைம் லேண்ட்ஸின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) குழுக்களின் அர்ப்பணிப்புடன் கூடிய கூட்டு முயற்சி மற்றும் இணையத்தள மேம்பாட்டுப் பங்காளியான Tek Geeks (Pvt) Ltd இன் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவையும் நடுவர் குழுவை வெகுவாகக் கவர்ந்தன.

LK டொமைன் ரெஜிஸ்ட்ரி (LK Domain Registry) மூலம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் BestWeb.lk, இலங்கையின் முதன்மையான இணையப் போட்டியாகக் கருதப்படுகிறது, இது நிறுவனங்களின் டிஜிட்டல் நிபுணத்துவம் மற்றும் புத்தாக்கத்தை முன்னிலைப்படுத்துகிறது.

Related News

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.