ஆரம்ப விலை
YOLO என்பது சர்வதேச அரங்கில் பெருமையுடன் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விருது பெற்ற திட்டமாகும். தாய்லாந்தின் 'வேர்ல்ட் பிசினஸ் அவுட்லுக்' விருதுகளில் 2024 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் சிறந்த ரியல் எஸ்டேட் திட்டமாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரமானது, மிகச்சிறந்த தரத்தை வழங்குவதில் YOLO-வின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், உலக அமைப்பில் இலங்கை ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு புதிய மைல்கல்லையும் அமைத்துள்ளது.
இலங்கையின் முதலாவது நவீன குடியிருப்பு நகரமான YOLO, கிரிபத்கொடையில் தொலைநோக்கு வடிவமைப்பு, பிரீமியம் வசதிகள் மற்றும் இணையற்ற சொகுசுடன் தற்கால வாழ்வியலை மறுவரையறை செய்யும் ஒரு மைல்கல் திட்டமாகும்!
இலங்கை ரியல் எஸ்டேட் துறையின் நிகரற்ற தலைவரான பிரைம் குரூப் (Prime Group), கிரிபத்கொடையின் மையப்பகுதியில் 13 ஏக்கர் பசுமையான நிலப்பரப்பில் இந்த மிகச்சிறந்த குடியிருப்பு அற்புதத்தை வழங்குகிறது!
இந்த ஆடம்பர திட்டத்தில் 476-க்கும் மேற்பட்ட குடியிருப்பு அலகுகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்புத் தொகுதியிலும் 6 முதல் 12 அலகுகள் வரை உள்ளன. ஒவ்வொன்றும் தனிப்பட்ட டெரஸ் வசதியைக் கொண்டுள்ளன, இது குடியிருப்பாளர்களுக்கு தனிப்படைமையையும் சமூக வாழ்வியலையும் இணைத்த ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. இந்த கட்டிடக்கலை அற்புதம் கூட்டாண்மையின் வலிமைக்கு ஒரு சிறந்த சான்றாகவும், எதிர்வரும் காலங்களுக்கும் இலங்கையின் பெருமைமிகு வெற்றிப் பயணமாகவும் திகழ்கிறது.
இந்த நவீன குடியிருப்பு நகரம், இலங்கையில் இதுவரை கண்டிராத அசாதாரண வடிவமைப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளை அறிமுகப்படுத்தும் அதிநவீன கிளப்ஹவுஸ் ஒன்றைக் கொண்டுள்ளது. பின்வருபவை உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளை இங்கு நீங்கள் அனுபவிக்கலாம்:
இலங்கையில் சமூக வாழ்வியலை மறுவரையறை செய்யவுள்ள இப்புதிய திட்டம், சொகுசு, வசதி மற்றும் நளினம் நிறைந்த ஒப்பற்ற வாழ்க்கை முறையை வழங்குகிறது. இளைஞர்கள் மற்றும் இதயத்தால் என்றும் இளமையாக இருப்பவர்களுக்கு ஏற்ற அதிநவீன பொழுதுபோக்கு மண்டலத்தைக் கொண்டு, இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க குடியிருப்பு முகவரிகளில் ஒன்றாகத் திகழ்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது!
பிரைம் குரூப்பின் இந்த புதிய மற்றும் மிகச்சிறந்த குடியிருப்பு திட்டத்தில் உங்களுக்கான வாய்ப்பை பதிவு செய்ய தாமதிக்கும் முன், உடனே எங்களை +94 11 20 30 838 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள் அல்லது +94 11 20 30 800 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யுங்கள்!
இன்றே பிரைம் வழங்கும் YOLO-வில் முதலீடு செய்யுங்கள் – ஏனெனில் 'நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்'
சிற்றேடு
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.